திடீரென ரேஸ் உடையில் களமிறங்கிய விஜய் - தேசிய கொடியுடன் முதல்வர் விஜய் - ரேஸர் அஜித்... வைரலாகும் வீடியோ!
பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்துடன் இணைந்து இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரிட்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், நடிகரும் பந்தய வீரருமான அஜித்தின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை நேரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பந்தயம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கார் பந்தய வீரருக்கான பிரத்யேக உடையில் இருந்த முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித்துடன் இணைந்து இந்தியாவின் மூவர்ணக் கொடியை இரு கைகளால் பிடித்தவாறு உற்சாகமாக வலம் வந்தனர்.
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் இருவரும் சர்வதேச அரங்கில் இந்திய தேசியக் கொடியுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.