காங்கிரஸ் கட்சி, தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை - விஜய் வசந்த் எச்சரிக்கை!

 

சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் குறித்து அவதூறான அல்லது ஆபாசமான கருத்துக்களைப் பரப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவின் புதிய தலைவர் விஜய் வசந்த் எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் வசந்த் எம்.பி., சமூக வலைதளங்களை உபயோகிப்பவர்கள் மிகவும் நாகரிகமாகவும் கண்ணியமாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தனிநபர்களை இழிவுபடுத்தும் செயல்களைத் தவிர்ப்பது அவசியமானது என்றும், கட்சித் தலைவர்கள் மீதும் கட்சி மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.