இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார் முதல்வர் விஜய்!

 

தமிழக முதலமைச்சர் விஜய், 3 நாட்கள் அரசுப் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் மாலை 5:45 மணிக்கு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற விஜய், நேற்று மாலை 6 மணிக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சந்திப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜாவைச் சந்தித்துப் பேசினார். 

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் விஜய், இக்கூட்டத்தில் தமிழகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள், துறைமுக மேம்பாடு, நிதி ஒதுக்கீடு மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளார்.

முதலமைச்சருடன் அவரது நேர்முக உதவியாளர் ஜெகதீஷ், நண்பர்கள் விஷ்ணு ரெட்டி, ராஜ்குமார் உள்ளிட்ட 7 பேர் டெல்லி சென்றுள்ளனர். இன்று நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு, நாளை ஜூன் 12 அன்று மங்களூரு வழியாக கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்த பின்னர் சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.