மக்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு...  விஜய்யின் முதல் கையெழுத்து இது தான்...  !

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ள விஜய்யின் முதல் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் மாநிலம் முழுவதும் தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் பரப்புரையின் போது அவர் அளித்த வாக்குறுதிகளில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் சிறகடிக்கத் தொடங்கியுள்ளன.

தவெக தலைவர் விஜய் தனது முதல் கையெழுத்தைப் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் அல்லது கல்விக்கடன் தள்ளுபடி போன்ற மக்கள் நலத்திட்டங்களில் இடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான நீட் தேர்வு ரத்து தொடர்பான தீர்மானம் அல்லது மதுவிலக்கு நோக்கிய முதற்கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டத்தை அவர் அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வர, விஜய்யின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் அறிவிப்பைக் கேட்கத் தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.