லட்சங்களில் சம்பளம்... பல அடுக்கு பாதுகாப்புடன் வலம் வரும் தமிழக முதல்வர் விஜய்!

 

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருக்கான அடிப்படை மாத ஊதியம் ரூபாய் முப்பதாயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தினசரிப் படி, தொகுதிப் படி உள்ளிட்ட பல்வேறு இதர படிகளுடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தற்போதைய நிலவரப்படி மாதந்தோறும் ரூபாய் 1.05 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்குப் பல்வேறு இதர படிகள் மற்றும் சிறப்புச் சலுகைகளுடன் சேர்த்து மாதச் சம்பளமாக ரூபாய் 2.05 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவருக்கு அரசுத் தரப்பிலிருந்து பல்வேறு கூடுதல் சிறப்பு சலுகைகளும், அரசு சாரா இதர சலுகைகளும் முழுமையாகக் கிடைக்கின்றன.

மேலும், அவரது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு இசட் பிளஸ் (Z+) எனப்படும் மிக உயரிய பாதுகாப்பை வழங்கியுள்ளது. இதனால் அவரது பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் நவீனத் தொழில்நுட்பத் தடைக்கருவி (ஜாமர்) வாகனம் மற்றும் அதிநவீனப் பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள் உள்ளிட்ட பல அடுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.