மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க  தொடர்ந்து செயல்படுவோம்...  முதல்வர் விஜய் ஆவேசம்! 

 

தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களின் நலனே தனக்கு முக்கியம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அப்போது தோழமைக் கட்சி எம்பிக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், மக்கள் நலனே எனக்கு முக்கியம் என்று தெளிவாகக் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார்.தமிழக மக்களின் நலன் மற்றும் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் உறுதியளித்ததாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.