பேச அனுமதி தரல... திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு!  

 

 

 

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு தங்களைப் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாகத் தங்களுக்குப் பதிலளிக்க அனுமதி கோரி திமுகவினர் பேரவையில் திடீரெனத் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சட்டமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்துத் தர்ணாவில் ஈடுபட்டவர்களை உடனடியாக வெளியேற்றச் சபாநாயகர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். எனினும் சபாநாயகர் தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்படாததால் திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.