சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த பெண் பரிதாப பலி! விநாயகர் அன்னதான சமையலில் சோகம்

 

 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பையொட்டி நடைபெற்ற அன்னதானத்திற்காக சமையல் செய்து கொண்டிருந்த பெண், எதிர்பாராதவிதமாக சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து பலத்த தீக்காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

விஜயவாடா கே.எல். ராவ் நகரைச் சேர்ந்தவர் மட்டி சுஜாதா (46). விநாயகர் சிலை கரைப்பையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிக்காக அவர் சமையல் செய்து கொண்டிருந்தார்.அப்போது அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சாம்பார் பாத்திரத்தை இறக்குவதற்காக சுஜாதா முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி சாம்பார் பாத்திரத்திற்குள் விழுந்துள்ளார்.

இதில் சுஜாதாவின் முகம், மார்பு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுஜாதா திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.விநாயகர் சிலை கரைப்பையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிக்காக சமையல் செய்த பெண் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.