மிரட்டும் 'விசில்' சிக்னேச்சர் - விஜய் வெளியிட்ட பிரச்சார பாடல் - "விசில் அடிக்க ரெடியா?"

 

தவெக தேர்தல் சின்னமான 'விசில்' சின்னத்தை மையப்படுத்தி, அக்கட்சியின் அதிகாரப்பூர்வத் தேர்தல் பிரசாரப் பாடல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் காணும் விஜய், இந்தப் பாடலின் மூலம் தனது அரசியல் அதிரடியைத் தொடங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தப் புதிய பிரசாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். விஜய்யின் அரசியல் கொள்கைகளை விளக்கும் வகையில் பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியுள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/JHJmFbLeK-Y?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/JHJmFbLeK-Y/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

தவெக-வுக்கு ஒதுக்கப்பட்ட 'விசில்' சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில், பாடல் முழுவதும் விசில் சத்தம் ஒரு 'சிக்னேச்சர்' துணுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. "உங்க விஜய் நா வரேன்.. விசில் அடிக்க ரெடியா?" போன்ற வரிகள் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் இதுவரை திட்டமிட்டபடி தனது பிரசாரக் கருவிகளை உருவாக்கி வருகிறது: கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய போது வெளியானது. கட்சியின் சித்தாந்தங்களை விளக்கி வெளியிடப்பட்டது. விஜய்யின் அரசியல் வருகையைக் கொண்டாடும் வகையில் உங்கள் விஜய் நா வரேன் பாடல். தற்போது சின்னத்தை முன்னிறுத்தி வெளியாகியுள்ள தேர்தல் பிரசாரப் பாடலாக விசில் பாடல் வெளியாகி உள்ளது.

தவெக-வின் இந்தப் பாடல் வெளியீடு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக-வும் தங்களது பிரசாரப் பாடல்களைத் தயார் செய்து வருகின்றன. குறிப்பாக, தவெக-வின் 'விசில்' சத்தத்திற்குப் போட்டியாகத் தங்களது சாதனைகளை விளக்கும் 'தீம்' பாடல்களை (Theme Songs) வெளியிட அந்தப் பெரிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

திருச்சியில் இன்று விஜய் பிரசாரத்தைத் தொடங்க உள்ள நிலையில், இந்தப் பாடல் அனைத்துப் பிரசார வாகனங்களிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.