“ச்சும்மாவே இருக்க மாட்டியா?” த்ரிஷா இன்ஸ்டா போஸ்டால் கொதிக்கும் விஜய் ரசிகர்கள்!

 

ஆடிய காலும், பாடிய வாயும் ச்சும்மாயிருக்காது என்பார்கள். ஏதாவது ஒரு பரபரப்பும், கிசுகிசு செய்திகளும் வலம் வந்துக் கொண்டு எப்போதும் தான் லைம் லைட்டில் இருந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று நடிகைகளில் பெரும்பாலோர் ஆசைப்படுவார்கள் போல. அது த்ரிஷா விஷயத்தில் தினம் தினம் உண்மையாகிக் கொண்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து ப் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை த்ரிஷா எதைச் செய்தாலும் அது செய்தியாகும் காலம் இது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் குடும்ப விவகாரங்கள் குறித்த கிசுகிசுக்களில் த்ரிஷாவின் பெயர் அடிபட்டது முதல், அவரது ஒவ்வொரு சமூக வலைதளப் பதிவும் ரசிகர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படம் ஒன்று ஆன்மிக ரீதியான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விஜய், இத்தனை அரசியல் பஞ்சாயத்து, பரபரப்புக்கு இடையேயும் அட்லீ வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மும்பை சென்றிருந்த போதும், த்ரிஷா, இன்ஸ்டாவில் புகைப்படம் பதிவுசெய்து, மும்பையிலிருந்து என்று செக் வைத்திருந்தார். 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நடிகை த்ரிஷா அனுமன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது அவர் தனது செல்லப் பிராணியையும் (நாய்) உடன் அழைத்துச் சென்றுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த த்ரிஷா, "தனது செல்லப்பிராணி முதல் முறையாகக் கோவிலுக்கு வந்துள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

புனிதமான கோவிலுக்குள் எப்படி நாயை அழைத்துச் செல்லலாம்? இது ஆச்சாரங்களுக்கு எதிரானது அல்லவா? என ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்தைத் தீவிரமாக ஆராய்ந்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சில முக்கியத் தகவல்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர். த்ரிஷா தனது செல்லப்பிராணியுடன் இருக்கும் அந்தப் புகைப்படம், காருக்குள் அமர்ந்தபடி எடுக்கப்பட்டது போலத் தெரிகிறது. அவர் கோவிலின் கருவறைக்கோ அல்லது உட்பிரகாரத்திற்கோ நாயை அழைத்துச் செல்லவில்லை என்றும், கோவிலின் வெளிப்பகுதியில் அல்லது காரில் இருந்தபடி தரிசனம் செய்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் த்ரிஷாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் - சங்கீதா விவாகரத்துச் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவி வரும் வேளையில், த்ரிஷா எதைப் பதிவிட்டாலும் அதில் ஏதேனும் உள் அர்த்தம் இருக்குமோ எனப் பலரும் தேடி வருகின்றனர். ஆனால், த்ரிஷா மற்றும் விஜய் தரப்பு இது போன்ற எந்தச் சர்ச்சைகளுக்கும் இதுவரை வெளிப்படையாகப் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். எனினும், நீ சும்மாவே இருக்க மாட்டியாமா... உனக்கு ஏன் இந்த வேல... எலெக்‌ஷன் முடிகிற வரையில் வாயை மட்டுமல்லாமல் கையையும் சும்மா வெச்சிரு” என்று த்ரிஷாவுக்கு சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிவுரை கூறி வருகின்றனர்.