விஜய் வைத்திருக்கும் பெரிய திட்டம்... இன்று தாராபுரத்தில் செம மாஸ்.. வீடு வீடாக பிரச்சாரம்!

 

மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் இருமுறை தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டதன் மூலம் அங்கு தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமாவின் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள்போல் வந்த எதிர்க்கட்சியினர் சிலரால் இடையூறு ஏற்பட்டு விரட்டப்பட்டதாகப் பரவிய பரபரப்புக்கிடையே, இன்று முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நேரடியாகக் களமிறங்கிப் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

மதுராந்தகத்தில் வெற்றிகரமாகக் கடைபிடிக்கப்பட்ட அதே உத்தியை தாராபுரத்திலும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது, பொதுமக்களை நேரடியாகச் சந்தித்துக்குறைகளைக் கேட்பது மற்றும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிவது போன்ற பல்வேறு திட்டங்கள் இன்றைய பிரச்சாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் இடையூறுகளையும் மீறி, தாராபுரத்தில் முதல்வர் விஜயின் இந்தப் பிரச்சாரம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.