undefined

விஜய்யின் மக்கள் சந்திப்பு மீண்டும் தொடக்கம்... சிடிஆர் நிர்மல் குமார்!  

 

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கரூர் நிகழ்வின் சோகத்திலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது. அந்த நிகழ்வுக்குப் பிறகு கட்சிப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தலைவர் விஜய் கட்சி பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவது, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியதாவது: “கரூர் சம்பவத்துக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறை நடவடிக்கை குறித்து நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். இன்று கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசாரம் தொடரும்; அனுமதி கிடைத்தவுடன் தொடங்கப்படும். எவ்வளவு நெருக்கடி வந்தாலும் நாங்கள் எதிர்கொள்வோம். தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!