தமிழகத்தில் விதிமீறல்... 639 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்; அனுமதிச்சான்று ரத்து செய்ய எச்சரிக்கை!
தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிச் செயல்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 639 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டன. அந்த வாகனங்களிடம் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் வரி மற்றும் இணக்கக் கட்டணமாக ரூ.30.77 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பயண டிக்கெட்டுகளை வாகன உரிமையாளர்கள் ஏதேனும் காரணத்தால் ரத்து செய்தால், பாதிக்கப்பட்ட பயணிக்கு உடனடியாக மற்றொரு மாற்றுப் பேருந்தில் பயண ஏற்பாட்டைச் செய்து தர வேண்டும்.
இந்த விதியைக் பின்பற்றத் தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தின் அனுமதிச்சான்று (Permit) உடனடியாக ரத்து செய்யப்படும் எனத் தமிழக அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.