வைரல் வீடியோ... கார் ரேஸ் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு நடிகர் அஜித் சொன்ன அன்பான அட்வைஸ்!

 

பிரிட்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்கியூட்டில் கார் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்குமாரைச் சந்திப்பதற்காகக் குவிந்த ரசிகர்களிடம் அவர் கனிவுடன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரிட்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேசிங் மைதானத்தில் தீவிர கார் பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித் ஈடுபட்டு வருகிறார். இதையறிந்த ஏராளமான ரசிகர்கள் அவரை நேரில் காண அங்கு திரண்டனர்.

பயிற்சி நடைபெறும் பகுதி பாதுகாப்பற்றது மற்றும் தடை செய்யப்பட்ட பகுதி என்பதை உணர்ந்த அஜித், ரசிகர்களை அன்புடன் அணுகி, “இது தடை செய்யப்பட்ட பகுதி, கொஞ்சம் ஓரமாக நில்லுங்க, வந்ததுக்கு ரொம்ப நன்றி” என மிகப் பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

தங்களுக்குப் பிடித்தமான நடிகரை நேரில் கண்டதுடன், அவர் தன்னிடம் கனிவாகப் பேசிய மகிழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தருணங்களின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.