வைரல் வீடியோ... திருமண ஊர்வலத்தில் திடீரென வயலில் பாய்ந்த கார்... சேறும், சகதியுமாய் மாறிய மணமக்கள்!

 

வடக்கு வியட்நாமின் துயென் குவாங் மாகாணத்தில் திருமண ஊர்வலத்தின் போது எதிர்பாராத விபத்து நிகழ்ந்தது. பலத்த காற்றில் மணமக்களின் பூங்கொத்து பறந்து காரின் முன்பக்கக் கண்ணாடியை மறைத்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சேறு நிறைந்த நெல் வயலில் கவிழ்ந்தது. 

View this post on Instagram

A post shared by Mothership (@mothershipsg)

காருக்குள் மணமக்கள் சிக்கிக்கொண்ட நிலையில், விபத்தைப் பார்த்த அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். பலரும் ஒன்றிணைந்து காரைத் தூக்கிப் பிடித்து, உள்ளே இருந்த மணமக்களைப் பத்திரமாக வெளியே மீட்டனர்.

இதில் கர்ப்பிணியாக இருந்த மணமகளும், வயிற்றில் இருந்த குழந்தையும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்தால் திருமண நிகழ்ச்சி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டாலும், மணமக்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.திருமண நாளில் நிகழ்ந்த இந்த எதிர்பாராத விபத்தும், கிராம மக்களின் துரிதமான மீட்புப் பணியும் அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.