வைரல் வீடியோ... மேடையிலேயே கதறியழுத சத்தியபாமா - ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், தவெக வேட்பாளர் சத்தியபாமா உணர்ச்சிவசப்பட்டுத் தாரை தாரையாகக் கண்ணீர்விட்ட நிலையில், தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அவரை அரவணைத்து ஆறுதல் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமா பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறாகப் பேசுவது குறித்தும், தான் பட்ட இன்னல்கள் குறித்தும் பேசி மேடையிலேயே கதறி அழுதார்.
வேட்பாளர் சத்தியபாமா கண்கலங்கி நின்றதைக் கவனித்த முதல்வர் விஜய், உடனடியாக அருகில் சென்று அவரை ஆரத்தழுவித் தன் கைகளால் ஆறுதல் கூறினார்.
தேர்தல் பிரச்சார மேடையில் முதல்வரும் கட்சியின் தலைவருமான விஜய் தனது வேட்பாளருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இந்த நெகிழ்ச்சியான தருணம், அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.