ஷூட்டிங்கில் நடிகையின் தொண்டையில் சிக்கிய மூக்குத்தி - சாதுரியமாக செயல்பட்ட நடிகர் - வைரல் வீடியோ!

 

திரைப்படப் படப்பிடிப்பின் போது நடிகை ஷெஹ்னாஸ் கில்லுக்கு எதிர்பாராத விதமாக மூக்குத்தி தொண்டையில் சிக்கிய சம்பவம் படப்பிடிப்புத் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஞ்சாபி மற்றும் இந்தித் திரையுலகில் பிரபல நடிகையான ஷெஹ்னாஸ் கில், தற்போது ‘இஷ்க்நாமா’ (Ishqnama) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அவர் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தி திடீரெனக் கழன்று வாய்க்குள் சென்று தொண்டைப் பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சுவிடச் சிரமப்பட்டு அவர் தவித்துள்ளார்.

இதைக் கண்டவுடன் அருகில் இருந்த சக நடிகர் சௌரப் சச்தேவா, உடனடியாக ஓடிவந்து ஷெஹ்னாஸ் கில்லின் முதுகில் பலமாகத் தட்டிக் கொடுத்து, தொண்டையில் சிக்கிய மூக்குத்தியை வெளியேற்றச் சாதுரியமாக உதவினார். இந்த ஆபத்தான சம்பவத்திலிருந்து மீண்ட சிறிது நேரத்திலேயே, ஷெஹ்னாஸ் கில் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த இந்தச் சலசலப்பு மற்றும் மீட்பு தொடர்பான வீடியோ காட்சிகளை நடிகை ஷெஹ்னாஸ் கில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.