வைரல் வீடியோ... லண்டனில் அருகருகே நின்று பந்தயத்தைக் கண்டு ரசித்த விஜய் - த்ரிஷா!

 

லண்டனில் நடைபெற்றுவரும் சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் களமிறங்கியுள்ள நிலையில், அப்பட்டியத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.

லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்றுவரும் சர்வதேச கார் பந்தயத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னர் அஜித் நின்றிருந்த கார் அருகே நேரில் சென்ற முதல்வர், அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் குமாரின் பந்தயத்தைக் காணவும், ஊக்கப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் நேரில் வருகை தந்தனர்.

சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் அருகருகே நின்றபடி பந்தயத்தை இருவரும் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வைரலாகி வருகிறது.