38 வயதில் அடியெடுத்து வைக்கும் விராட் கோலி! 86 சதங்கள்... 28000 ரன்களைக் கடந்த சாதனை நாயகன்!

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று (நவம்பர் 5) தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சக வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கோலி, தனது அபாரமான பேட்டிங்கால் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ள அவர், 86 சதங்களையும் விளாசியுள்ளார்.

இதில் டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 55 சதங்களும், டி20 சர்வதேசப் போட்டிகளில் ஒரு சதமும் அடங்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் தக்க வைத்துள்ளார்.

 சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் 74 ரன்கள் விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.கிரிக்கெட்டில் ரன்களைக் குவிப்பது மட்டுமின்றி, உடற்தகுதி, கடின உழைப்பு, ஆட்டத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றாலும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் விராட் கோலி.