மாஸ் வீடியோ... விராட் கோஹ்லி தான் பெஸ்ட்! பாகிஸ்தானி ரசிகை அதிரடி!!
Sep 4, 2023, 15:14 IST
ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் முக்கிய போட்டியாக கருதப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் இலங்கைக்கு படையெடுத்தனர். ஆனால், போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. போட்டியை நேரில் காண வந்த பாகிஸ்தான் ரசிகை ஒருவர் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமா? இந்தியாவின் விராட் கோலியா? உங்களது ஆதரவு யாருக்கு என அந்த பெண்ணிடம் கேட்டபோது, "விராட் கோஹ்லிதான் எனது பேவரிட் வீரர். அவருக்காக தான் நான் இங்கு வந்துள்ளேன். அவர் சதம் அடிக்காமல் போனது ஏமாற்றம் அளித்தது" எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.