விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பால் அல்வா விலை உயர்வு!
Updated: Sep 1, 2026, 09:04 IST
சர்க்கரை விலை உயர்வு எதிரொலியாக, உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மற்றும் இதர இனிப்பு வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஒரு கிலோ பால்கோவாவின் விலை ரூ. 360-ல் இருந்து ரூ. 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பால் அல்வாவின் விலை ரூ. 400-ல் இருந்து ரூ. 450 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்ற பிற தயாரிப்புகளின் விலையும் கிலோவுக்கு ரூ. 50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாகச் சந்தையில் சர்க்கரையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த விலை மாற்றத்தைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.