பெண்ணோட வாழ்க்கைய சிதைக்காதீங்க!! விஷால் திருமணம் குறித்து ஆவேசம்!!

 

நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த போதே விஷால் லட்சுமி மேனனுக்கு இருவருக்கும் காதல் எனச் சொல்லப்பட்டது. இப்போது இவர்களது திருமண செய்தி மீண்டும் கவனம் பெற்றுள்ளது.  தற்போது இண்ட்க தகவல்  குறித்து நடிகர் விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.அதில் “பொதுவாக என்னைப் பற்றிய எந்த வதந்திகளுக்கும் நான் பதில் கொடுக்க மாட்டேன். ஏனெனில், அது பயனில்லாதது . ஆனால், இப்போது நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என்கிற வதந்தி   முழுக்க முழுக்க ஆதாரமற்றது.

 ஏன் இப்போது விளக்கம் கொடுக்கிறேன் என்றால், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்காதீர்கள். அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள். ஆண்டு, தேதி, நேரம் எல்லாம் பார்த்து, எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு என் திருமணம் ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்’ என விஷால் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

நடிகர் விஷாலுக்கு காதலியுடன் திருமணம் என்ற தகவல்   சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நடி விஷால் தற்போது 'துப்பறிவாளன்', 'மார்க் ஆண்டனி' படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முன்பு நடிகர் விஷாலுக்கும் நடிகை வரலட்சுமிக்கும் காதல், விரைவில் அவர்கள் திருமணம் செய்ய போகிறார்கள் என கூறினர். இருவரும் நல்ல நண்பர்கள் என அவர்களே உறுதிப்படுத்தினர் . நடிகை லட்சுமிமேனன் உடன் விஷாலுக்கு காதல் என தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு நடிகர் விஷாலுக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த திருமணமும் நின்று போய்விட்டது. தற்போது மீண்டும் லட்சுமி மேனன் உடன் விஷாலுக்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.  நடிகர் சங்க கட்டிடத்தில் தான் தங்கள் திருமணம் என நடிகர் விஷால் கூறியிருப்பதால் அதன் பணிகள் நடைபெற்று வருவதாக நேற்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!