பழனியில் இன்று தேரோட்டம்.. களைக்கட்டும் பங்குனி உத்திர திருவிழா... 300 டன் மலைவாழைப்பழம்  குவிந்தது!

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கடந்த 18ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழச்சியான முருகன்- வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று 23ம் தேதி மாலை நடைப்பெற்றது. இன்று பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து கூட்டம் கூட்டமாக வண்ணம் உள்ளனர். 

பக்தர்கள் மலை அடிவாரத்தில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் ஊர்களுக்கு எடுத்து செல்வது வழக்கம். பஞ்சாமிர்தம் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மலைவாழைப்பழம் சுமார் பதினைஐந்து லட்சம் பழங்கள் 300 டன் அளவிற்கு மலை அடிவாரத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குடகு, ஆடலூர், பன்றிமலை, சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களில் மலைவாழைப்பழங்கள் பழனிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், வாழைபழத்தின் தரத்தை பொறுத்து ஒரு பழம் ரூபாய் 6 முதல் ரூபாய் 11 ரூபாய் வரையும்  விற்பனை செய்யப்படுவதாகவும்  வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டை விட விலை சற்று கூடுதலாக  விற்பனை செய்யப்படுவதாகவும்,  மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்து பழங்களின் வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வரத்துங்கியுள்ளதால் இரண்டு தினங்களில் அனைத்து பழங்களும் விற்பனைஆகிவிடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்