இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது... ஆர்வமுடன் வரிசையில் குவியத் தொடங்கிய வாக்காளர்கள் - அக்.9ல் ரிசல்ட்!

 

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது.

தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி (நாதக) மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எனப் பலமுனைப் போட்டி நிலவும் இத்தேர்தலில், மதுராந்தகத்தில் 28 வேட்பாளர்களும், தாராபுரத்தில் 23 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்துள்ளனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு, உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.