7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... கொளத்தூர் எம்.எல்.ஏ. மறைவுக்கு தவெக கட்சி நிகழ்ச்சிகள் ரத்து!
Nov 19, 2026, 17:34 IST
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு மறைவையடுத்து, கட்சி சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு இன்று (நவ.19) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வி.எஸ்.பாபுவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அடுத்த 7 நாட்களுக்கு கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், துக்கம் அனுசரிக்கப்படும் 7 நாட்களும் தவெக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.