கொளத்தூர் எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு மறைவு... முதல்வர் விஜய் நாளைய பயணம் ரத்து!
Updated: Nov 19, 2026, 16:43 IST
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு மறைவையடுத்து, முதல்வர் விஜய்யின் நாளைய திருச்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், முதல்வர் விஜய் நாளை திருச்சியில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.