விஎஸ் பாபு நலமாக இருக்கிறார்... வதந்திகளுக்கு அமைச்சர் மரியவில்சன் விளக்கம்!
சட்டமன்ற உறுப்பினர் விஎஸ் பாபுவின் உடல்நிலை குறித்துச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தவறான வதந்திகளைப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர் மரியவில்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஎஸ் பாபு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலையைக் கேட்டறிந்த அமைச்சர் மரியவில்சன், அவர் நலமாக உள்ளதாகவும், தாமும் அவருடன் நேரடியாகப் பேசியதாகவும் தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகள் சீரான இடைவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் தேறி வருவதாகவும் கூறினார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு விஎஸ் பாபுவின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள இந்த அதிகாரப்பூர்வத் தகவல் தொண்டர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.