வியாசர்பாடி தனுஷ் கொலை வழக்கில் 4 பேர் கைது! சித்தியுடனான உறவைத் தட்டிக்கேட்டதால் விபரீதம்?

 

 

சென்னை வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் தனுஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பொய்யாது, அப்புக்குட்டி, சூர்யா, பாட்ஷா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது தனுஷ், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். தீபாவளி இரவில் அவரது அண்ணன் சிலம்பரசனுக்கும், அப்புக்குட்டி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில் தனுஷ் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்தார்.

 

விசாரணையில், தனுஷின் சித்திக்கும் பொய்யாது என்பவருக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் தகாத உறவை தனுஷ் தட்டிக்கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பின்னணியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்