கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி... தகுதி விதிமுறைகள் விரைவில் வெளியாகிறது!

 

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற மக்களுக்குத் தள்ளுபடி கிடைப்பது குறித்த புதிய விதிமுறைகள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகைக்கடன் தள்ளுபடித் திட்டத்தை முறைப்படுத்தவும், உண்மையான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவதை உறுதி செய்யவும் பின்வரும் நபர்களுக்குக் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது:

அரசு ஊழியர்கள்: அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள், கூட்டுறவுச் சங்க ஊழியர்கள்: கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள்,  கடன் பெறும்போது தவறான ஆவணங்கள் அல்லது தவறான முகவரிச் சான்றுகளை அளித்துப் போலியாகக் கடன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கும் அதிகமாக நகைக்கடன் பெற்றிருந்தால், விதிமுறைகளின்படி தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

நகைக்கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வச் செய்தி மற்றும் பயனாளிகளின் இறுதிப் பட்டியல் குறித்துத் தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு, கடன் தள்ளுபடி செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையட்டி தமிழக அரசு வெளியிட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேஷன் கார்டு மற்றும் கடன் கணக்கு பதிவுகளின் அடிப்படையில் அதிகாரிகள் நேரடியாகத் தகுதியானவர்களை ஆய்வு செய்து பட்டியலைத் தயாரித்து வருகின்றனர்.