பரபரப்பு வீடியோ ... விமான சாகச நிகழ்ச்சியில் எப்-4 பாத்தான் ரக போர் விமானம் விபத்து!
Sep 6, 2026, 07:10 IST
கிரீஸ் நாட்டில் விமான சாகச நிகழ்ச்சியின்போது, விமானப்படைக்குச் சொந்தமான எப்-4 பாத்தான் ரக போர் விமானம் நேற்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தாலும், விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் பத்திரமாக கீழே குதித்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து விமானத்தில் பற்றிய தீயை வெற்றிகரமாக அணைத்தனர். இந்த அதிர்ச்சிகரமான விபத்து குறித்து உரிய அதிகாரப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.