மீண்டும் போர் பதற்றம்... ஜோர்டானில் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்...

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களுக்குப் பிறகு தற்காலிக அமைதி நிலவி வந்த சூழலில், ஜோர்டானில் அமைந்திருக்கும் அமெரிக்க ராணுவப் படைத்தளத்தைக் குறிவைத்து ஈரான் மீண்டும் திடீர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானின் புரட்சிகரக் காவல் படை சார்பில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் விமானப் படைத்தளத்தைக் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டன. எனினும், ஈரான் ஏவிய இந்த ஏவுகணைகளை ஜோர்டான் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் நடுவானிலேயே வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தி முறியடித்தன. இதனால் பெரிய அளவிலான சேதங்களோ, உயிரிழப்புகளோ தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதி திரும்புவதற்கான சூழல் உருவாகி வந்த நிலையில், இந்த எதிர்பாராதத் தாக்குதல் சம்பவம் மீண்டும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் அமைதியை நோக்கிச் நகர்ந்து கொண்டிருந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில், இத் தாக்குதலால் மீண்டும் கடும் பதற்றமும் போர்ப்பீதியும் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் உன்னிப்பாகக் கவனித்து வரும் அமெரிக்கப் படைகள் உச்சகட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.