எல்லையில் போர் பதற்றம்... காஷ்மீரை நோக்கி நகரத் தொடங்கும் பாகிஸ்தான் இராணுவம்!
இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரித்து வருவதால் 1960ம் ஆண்டு சிந்து நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் இத்தகைய நடவடிக்கைகளுக்கான ஆதரவை நம்பகத்தன்மையுடனும் மீள முடியாத வகையிலும் நிறுத்தும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, இராணுவ, கடற்படை மற்றும் விமான ஆலோசகர்களைப் புறக்கணிக்கத்தக்க நபர்களாக இந்தியா அறிவித்தது. அவர்கள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் காஷ்மீர் வடக்கு நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்த படைகள் நகர்கின்றன. ராவல்பிண்டி நகரின் வழியாக இராணுவப் படைகள் நகர்வதை வீடியோக்கள் காட்டுகின்றன. இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதற்கு இது பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!