மீண்டும் போர் பதற்றம்... ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுமின்றி அரபு நாடுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களையும் குறிவைத்து நடத்தி வருகிறது.
ஜோர்டான் நாட்டை இலக்காகக் கொண்டு ஈரான் தரப்பிலிருந்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தீவிரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய தொடர் மோதல்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதுடன், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல்கள் சற்றுத் தணிந்திருந்த நிலையில், தற்போது அமெரிக்கா - ஈரான் இடையேயான நேரடித் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்துள்ளது.