ரயில் முன் பாய்ந்து காவலாளி தற்கொலை... மதுப் பழக்கத்தால் மனைவி பிரிந்ததால் விபரீதம்!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் ரெனால்டு (38). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மதுப் பழக்கத்தின் காரணமாக இவருடைய மனைவிக்கும் இவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கணவனின் மதுப் பழக்கத்தைக் கண்டித்து மனைவியும் இவரைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியிலும் மனவேதனையிலும் இருந்த ரெனால்டு விபரீத முடிவெடுத்தார். இதன் காரணமாக அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்குத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்தும் வந்த தீவிர சிகிச்சைகள் பலனின்றி, நேற்று அதிகாலை ரெனால்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.