மேட்டூர் அணையில் நீர் திறப்பு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிப்பு!
Sep 7, 2026, 10:30 IST
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 92.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 55.35 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 8,612 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக வினாடிக்கு 7,000 கன அடியாக இருந்த நீர் திறப்பு, பின்னர் 10,000 கன அடியாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது அதனை 12,000 கன அடியாக அதிகரிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் இந்த கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.