வயநாடு நிலச்சரிவு.. "ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம்" - கேரள முதல்வர் குற்றச்சாட்டு!
கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுக்கு ஒப்பந்ததாரரின் அப்பட்டமான அலட்சியமே காரணம் என்று அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தற்செயலாக நடந்தது அல்ல, விதிமீறல்களால் நிகழ்ந்தது என்பதைக் கேரளா முதல்வர் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஆபத்தான முறையில் குவிக்கப்பட்டிருந்த மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கடந்த ஜூன் 20-ஆம் தேதியே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த அவசர உத்தரவை ஒப்பந்ததாரர் முறைப்படி செயல்படுத்தாமல், தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்துள்ளார்.
நிர்வாகத்தின் இந்தத் தெளிவான எச்சரிக்கையையும், விதிமுறைகளையும் ஒப்பந்ததாரர் அடியோடு புறக்கணித்ததே தற்போதைய பெரும் நிலச்சரிவு விபத்துக்கு முதன்மைக் காரணமாக அமைந்துவிட்டது என்று முதல்வர் வி.டி.சதீசன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.