"எல்லா அமைச்சருக்கும் பட்ட பெயர் வச்சு தான் கூப்டுகிட்டு இருக்கோம்" -  உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

 

தாராபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,  தவெகவின் அமைச்சர்களின் பெயர்கள் யாருக்கும் தெரியாது என்றும், "சங்கி அமைச்சர்", "பவுடர் அமைச்சர்", "லாட்டரி அமைச்சர்" என்று பட்டப் பெயர் வைத்துத் தான் தாங்கள் அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். முதலமைச்சருக்கே அவர்களின் பெயர்கள் தெரியாது என்றும் அவர் விமர்சித்தார்.

allowfullscreen

தவெக நிர்வாகி ராஜ்மோகனைக் குறிப்பிட்ட அவர், "அவர் பேசத் தொடங்கினால் காதை மூடிக்கொள்ள வேண்டும்" என்று கூறி, அவருக்குத் தங்களின் தரப்பிலிருந்து 'பட்டிமன்ற அமைச்சர்' எனப் பட்டப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் கிண்டலடித்தார்.

தவெக ஆட்சியில் தலைவர்கள் என்றால் 'சோபா' என்றும், எம்.எல்.ஏக்கள் என்றால் 'பெட்டி' என்றும் கடுமையாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின், தாராபுரம் கூட்டத்தில் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அனல் பறக்கும் பதிலடிகளைக் கொடுத்தார்.