சென்னையில் எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்... மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மற்றும் பிற தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புக்கிடையில் எவ்வளவு மழை வந்தாலும் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், கோயம்புத்தூர், நீலகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடனும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், “21ம் தேதி புயல் வர வாய்ப்பு உள்ளதால் கடலோர மற்றும் ஆற்றங்கரை ஓரம் இருப்பவர்களை பாதுகாப்பாக மாற்ற நடவடிக்கை எடுத்து உள்ளோம். டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சியினர் கூறும் தகவல்கள் தவறானவை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த மூன்று மாதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்தே வருகின்றன. எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!