"நாங்க பத்திரமா இருக்கோம்" - நேபாளத்திலிருந்து தேச மங்கையர்கரசி வீடியோ வெளியீடு!

 

நேபாளத்தில் ஏற்பட்ட கோரப் பெருவெள்ளத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் யாத்திரை சென்ற 150 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் தமிழகத்திலிருந்து மானசரோவர் யாத்திரை சென்ற 150 பேரும், சாகா என்னும் பகுதியில் பத்திரமாக இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதிப்படுத்தியுள்ளார்.


அங்கு வெள்ளப்பெருக்கு காரணமாகப் போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களை மீட்டு நாடு திருப்புவதற்காக நேபாளம், சீனா மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளப் பெருவெள்ளத்தில் தமிழர்கள் பலர் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், யாத்திரை குழுவினர் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள இந்தத் தகவல் அவர்களின் உறவினர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.