“இதை விட மோசமான ரெய்டு எல்லாம் பாத்திருக்கோம்” - ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

 

தனியார் பள்ளிகளை மிரட்டி லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இதை விட மோசமான ரெய்டை எல்லாம் பார்த்திருக்கோம்” என்றார். 

தனியார் பள்ளிகளை மிரட்டி ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இதை விட மோசமான ரெய்டு எல்லாம் நாங்க பாத்திருக்கோம். எங்க மேல போட்ட எந்த வழக்கையும் இதுவரை நிரூபிச்சதே இல்ல” எனத் தெரிவித்தார்.