"3ஆவது குழந்தை பெற சலுகை அறிவிக்க வேண்டும்”.. விசிக எம்பி ரவிக்குமார்
Jun 1, 2026, 19:30 IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தமிழகத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழகத்தில் பிறப்பு விகிதம் சரிவதைக் கட்டுப்படுத்த, கருத்தடை செய்து கொள்வதைத் தடுப்பதற்கான அல்லது முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் தொகையின் சமநிலையைப் பேணவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் 3-ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளும் குடும்பங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புச் சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவது தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களின் பின்னணியில் விசிக எம்பியின் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.