undefined

  ஒரு நாளும் சரணடைய மாட்டோம்... அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஈரான் பதிலடி! 

 


 
ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ஈரானில் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்கும் நிலையில் கமேனி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
‘இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது, அதற்கான தண்டனையை கொடுப்போம். அமெரிக்க ராணுவத்தின் எந்த ஒரு விதமான தலையீடும், சந்தேகத்துக்கு இடமின்றி சீர்படுத்த முடியாத அளவுக்கு பெரும் சேதத்தை சந்திக்கும். ஈரானையும், அதன் மக்களையும், அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள் ஒருபோதும் இந்த நாட்டுடன் அச்சுறுத்தல் மொழியில் பேச மாட்டார்கள், எனக் கூறியுள்ளார்.


ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை தாக்கும் என அஞ்சப்படுவதால், போர் இன்னும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர்.