டிசம்பர் 11 முதல் 4ம் சுற்று மழைப்பொழிவுக்கு தயாராகுங்க... வெதர்மேன் அலெர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 11 இரவு முதல் 15 வரை மழை தீவிரமடைய இருப்பதாக டெல்டாவெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அத்துடன், புயல், வெள்ளம் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று டிசம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 11 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையும், இரவு/அதிகாலை அதிக பனிப்பொழிவும் நிலவும். மேலும் இன்று முதல் அடுத்த 5 நாட்களில் டெல்டா, தென் மாவட்டம், உள் மாவட்ட விவசாயிகள் பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு போன்ற வேளாண்மை பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இச்சலனம் புயலாக மாற வாய்ப்பு குறைவு என்றாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடகடலோரம்/ டெல்டா மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிககனமழையை கொடுக்கும்.
ஏற்கனவே புயல், வெள்ளம் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை.ஒட்டுமொத்தமாக டிசம்பர் 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர் பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!