undefined

அட.. இதப் பார்றா...  ரேஷன் கார்டு மாடலில்  திருமண அழைப்பிதழ்!

 

 
திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான். தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் அனைவரையும் கவரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் நம்மில் பலருக்கும் உண்டு. இன்றைய இளசுகள் புதுமையையும், ரசிக்கத்தக்கதாகவும் செய்ய விருப்பத்துடன் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஒருவர்  தனது திருமண அழைப்பிதழை ரேஷன் கார்டு ஸ்டைலில் அச்சடித்துள்ளார் . ஜோதிஷ் என்பவர் சிறுவயதில் தனது அம்மாவுக்கு உதவி செய்வதற்காக அடிக்கடி ரேஷன் கடைக்கு சென்று வந்துள்ளார். காலப்போக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த நபர்கள் ஜோதிஷை ரேஷன் கடை பையன் என செல்லமாக அழைக்க தொடங்கிவிட்டனர்.  


இதனை நினைவு கூர்ந்த ஜோதிஷ் தனது திருமண அழைப்பிதழை புது ஸ்டைலில் அச்சிட விருப்பம் கொண்டார்.   தனது திருமண அழைப்பிதழை ரேஷன் கார்டு ஸ்டைலில் அச்சடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது குறித்த   புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!