வார விடுமுறை, ஆடி ஞாயிறு... தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

வார விடுமுறை மற்றும் இன்று ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்தும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதே போன்று இன்று மாலை ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.