பாட்டி வீட்டிற்குச் சென்று வந்த மறுநாளே  16 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!  

 

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் ராபர்ட்ஸ்கஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட பஹுவாரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான வந்தனா என்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வந்தனா சம்பவத்திற்கு முந்தைய நாள்தான் தனது தாய்வழி பாட்டி வீட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி ஊரில் உள்ள கிணற்றில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். திடீரெனச் சிறுமி கிணற்றில் சடலமாக மிதந்த சம்பவம் சோன்பத்ரா பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

#UttarPradesh #Sonbhadra - Sensation in the area after the body of a 16-year-old girl was found in a well under suspicious circumstances.

The deceased has been identified as Vandana (16), resident of Bahuara.

It is reported that the girl had returned home from her maternal… pic.twitter.com/aTLauMQcTj

— Siraj Noorani (@sirajnoorani) July 21, 2026

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வந்தனாவின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். பாட்டி வீட்டிலிருந்து திரும்பிய மறுநாளே சிறுமி உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதால் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் மரணத்திற்கான உண்மை என்ன என்பதைக் கண்டறியக் காவல் துறை அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் புலனாய்வில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டி வீட்டிற்குச் சென்று திரும்பிய மறுநாளே 16 வயது சிறுமி கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை உருவாக்கியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வந்தனாவின் மறைவால் கதறித் துடித்து மீளாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். காவல் துறையினர் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அல்லது பின்னணி குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமியின் மரணத்தில் உள்ள மாய முடிச்சுகளை அவிழ்த்துக் குற்றவாளிகள் யாரேனும் இருப்பின் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.