மேற்குவங்க முன்னாள் அமைச்சர் உஜ்ஜல் பிஸ்வாஸ் காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 

 

மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் உஜ்ஜல் பிஸ்வாஸ் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 72.

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட மூளைப் பக்கவாதம் காரணமாக அவர் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளைச் சந்தித்து வந்தார். இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று வாரங்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அரசியல் தலைவர்கள் இரங்கல்

உஜ்ஜல் பிஸ்வாஸ் மறைவுக்கு மேற்குவங்க முன்னாள் முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முன்னாள் அமைச்சரின் மறைவு மேற்குவங்க அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.