மேற்கு வங்கம் மற்றும்   தமிழகத்தில்  மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம்?  மத்திய அரசு உறுதி! 

 

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ (PM SHRI) திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் நவீன ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் தரமான தொழில்முறைத் திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்திற்கான மொத்தச் செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகத் தமிழ்நாட்டில் இருந்த திமுக அரசு மற்றும் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஆகியவை இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மும்மொழிக் கொள்கை போன்ற அம்சங்கள் மாநில உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இவ்விரு மாநிலங்களும் இத்திட்டத்தில் இணையாமல் இருந்து வந்தன.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இத்திட்டம் விரைவில் அமலாகும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக-வும், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகமும் புதிய அரசை அமைக்க உள்ள நிலையில், கல்வித்துறையில் இந்த மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய அரசுகள் இத்திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.