தமிழத்தில் வேகமெடுக்கும் பாதிப்பு - டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?!

 

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அதனைத் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளப் பொதுமக்களும் நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டிய அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துக் கொண்டு, பாதுகாப்பாக இருங்க. 

வீடுகளுக்கு அருகில் உள்ள பாத்திரங்கள், தேங்காய் ஓடுகள், உரகல்கள், பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளில் மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டுப் பயன்பாட்டிற்காகச் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தொட்டிகள், பேரல்கள் மற்றும் பாத்திரங்களை எப்போதும் மூடியே வைக்க வேண்டும். இதன் மூலம் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.

வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதோடு, தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றுவது கொசு உற்பத்தியைத் முழுமையாகத் தடுத்து நிறுத்தும்.

பெரிய தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு தேங்கினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதால், நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பகல் நேரங்களிலும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவக்கூடும் என்பதால், முழுக்கை ஆடைகளை அணிவது சிறந்தது. மேலும், கொசு விரட்டி, க்ரீம்கள் மற்றும் லிக்யூட்களைப் பயன்படுத்தலாம்.

பகல் மற்றும் இரவு நேரத் தூக்கத்தின் போது கொசு வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.

உடலில் கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி அல்லது உடல் சோர்வு போன்ற டெங்கு அறிகுறிகள் தென்பட்டால், எளிய மருந்துகளை நாடாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சுயமாக மருந்துக்கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்த்து, மருத்துவரின் முறையான பரிந்துரைப்படி சிகிச்சை பெறுவது பாதுகாப்பானது.