undefined

லியோ கொண்டாட்டத்தில் லோகேஷ் கனகராஜுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள திரையரங்கம் ஒன்றிற்கு ரசிகர்களைக் காண சென்றார். அப்போது, லோகேஷை ரசிகர்கள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பரபரப்பில் லோகேஷ் கனகராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியான லியோ, கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்து திரையுலகை அதிரவைத்தது. இந்தாண்டு வெளியான இந்திய படங்களில் அதிகபட்ச முதல் நாள் வசூல் என்ற சாதனையை படைத்தது. மேலும், முதல் 4 நாள்களில் ரூ.404 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.